பெண் குழந்தைகளின் கல்வி உரிமை நூல் வெளியீட்டு விழா சமூக நலத்துறை ஆணையர் ஆபிரகாம் பங்கேற்பு

திருவண்ணாமலை


குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பும் - பெண் குழந்தைகளின் கல்வி உரிமை நூல் வெளியீட்டு விழாவும் ஆர்சிஎம் பள்ளிகளின் ஆசிரியர் கூட்டணி சார்பில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் வேலூர் சங்கமம் மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு வேலூர் மறை மாவட்ட ஆயர் டாக்டர் பி.சௌந்தர்ராஜீ தலைமை தாங்கினார். வேலூர் மறைமாவட்ட ஆர்சிஎம் பள்ளிகள் மேலாளரும் வழக்கறிஞருமான எஸ்.ஏ.எஸ். கிளமெண்ட் ரொசாரியோ முன்னிலை வகிக்க, தி.மலை போப் நிறுவன திட்ட மேலாளர் ஜஸ்டின்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பும் பெண் குழந்தைகளின் கல்வி உரிமை நூலாசிரியரும் போப் நிறுவனத்தின் இயக்குநருமான வழக்கறிஞர் ஆர்.எல்.ரொசாரியோ அறிமுக உரையாற்றினார். இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக அரசின் சமூக நலத்துறை ஆணையர் டி.ஆபிரகாம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பும் பெண் குழந்தைகளின் கல்வி உரிமை நூலினை வெளியிட, முதல் பிரதியை வேலூர் சமூக சேவை சங்க இயக்குநர் ஜேம்ஸ் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் 100 சதவித தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும் அதிக மாணவர் தேர்வு எழுதி அதிக தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாடவாரியாக 100 சதவிதம் தேர்ச்சியளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில் ஆர்சிஎம் பள்ளிகள் ஆசிரியர் கூட்டணி தலைவர் எஸ்.பெலவேந்திரம், செயலாளர் ஐ.ஆரோக்கியதாஸ், பொருளாளர் ஏ.மரியரபேல் ராஜன், துணைத் தலைவர் ஏ.அந்தோணிதாஸ், துணை செயலாளர் ஏ.கன்னிமாரி மற்றும் ஐ.ஜான்ராபர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் போப் நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர் டி.தாசையன் நன்றி கூறினார்.


Popular posts
மீஞ்சூர் ஒன்றியம் தடபெரும்பாக்கம் ஊராட்சியில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
Image
காட்பாடியில் உணவுக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது
Image
மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கம்பம் போடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி தனிமைப்படுத்தி கண்காணிப்பு
Image
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்
Image