வாணியம்பாடியில் காவல் துறை சார்பில் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்களை மாவட்ட கண்காணிப்பாளர் விஜய்குமார் வழங்கினார்.

வாணியம்பாடியில் காவல் துறை சார்பில் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்களை மாவட்ட கண்காணிப்பாளர் விஜய்குமார் வழங்கினார்.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இயங்கி வரும் தனியார் கையுறை தொழிற்சாலையில் பணி புரியும் வெளி மாநிலங்களை சேர்ந்த 77 தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில் பிஸ்கட், அரிசி, பழங்கள், முக கவசம் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் வழங்கினார். 


இதேபோல்  பெருமாள் பேட்டையில் உள்ள சரணாலயம் கருணை இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அரிசி, பிஸ்கட், பழங்கள், முக கவசம், சனிடைசர் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் வழங்கினர்.


நிகழ்ச்சியில் கொடாட்சியர் காயத்திரி  சுப்பிரமணியம், வட்டாட்சியர் சிவபிரகாசம், காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்