பட வாய்ப்பு குறைந்ததால் விரக்தி - நடிகை தூக்கிட்டு தற்கொலை
February 12, 2020 • Muthu kumar • சினிமா


" alt="" aria-hidden="true" />

மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் பகுதியை சேர்ந்தவர் நடிகை சுபர்னா ஜாஷ். இவர் பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியான வங்க மொழிப்படமான ‘மயூர்பங்கி’ திரைப்படத்திலும் சுபர்னா ஜாஷ் நடித்துள்ளார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், சுபர்னா ஜாஷ் அவரது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுபர்ணாவின் உடலை அவரது பெற்றோர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இளம் நடிகையான சுபர்ணா ஜாஸின் மரணம் பெங்காலி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Popular posts
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்
Image
வண்டலூர் ஜங்ஷனில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த போக்குவரத்து ஆய்வாளரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Image
புதுச்சேரி மேட்டுபாளையம் போலீஸ் கான்ஸ்டபுளின் அத்து மீறல்;
Image
மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கம்பம் போடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி தனிமைப்படுத்தி கண்காணிப்பு
Image